
#நிதின்_கட்கரி #CaptainNews | #TamilNews
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த மோட்டார் வாகன திருத்த மசோதாவை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தின்போது, இந்த சட்டத்தின்மூலம் மாநில உரிமைகள் கேள்விக்குரியாகும் என எதிர்கட்சிகள் தெரிவித்தன.
மேலும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி , ஓட்டுனர்களுக்கு கல்வித்தகுதி கட்டாயம் கிடையாது என்ற அமசத்தால் யாரும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல விரும்பமாட்டார்கள் என்றும் எதிர்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் குரல் வாக்கு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் vijayakanth part | |
2 Likes | 2 Dislikes |
119 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 23 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét