
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மனைவி ராதிகா மற்றும் நடிகை நிரோஷா உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் வைபவம் தற்போது நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த வைபவம், ஜூலை ஒன்றாம்தேதி தொடங்கியது முதல் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதன் 17வது நாளில் அத்திவரதர் மாம்பழ நிற பட்டையில் பச்சை வண்ண பார்டர் வைத்த உடை அணிந்து பஞ்சவர்ண பூக்களால் தயாரிக்கப்பட்ட நீண்ட மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் நடிகை நிரோஷா, தியாகு உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இதுவரை 18 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்
இதனிடையே, அத்தி வரதரை தரிசிக்க கூடுதலாக மின்சார ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே கூடுதலாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 5:15 செங்கல்பட்டில் புறப்படும் ரயில் இரவு 7 மணியளவில் சென்னை கடற்கரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் சரத்குமார்,ராதிகா- சாமி தரிசனம் camera iphone 8 plus apk | |
8 Likes | 8 Dislikes |
1,072 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 18 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét