
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் உயர்நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளருக்கும், டி.ஜி.பி.,க்கும், சிபிசிஐடி-க்கும் புகார் மனு அளித்ததாகவும், அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்...
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் குறித்து அறிக்கை தாக்கல் - உயர் நீதிமன்றம் உத்தரவு camera iphone 8 plus apk | |
3 Likes | 3 Dislikes |
81 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 15 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét