
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிணற்றில் சடலமாக வீசப்பட்ட பெண், கந்து வட்டித் தகராறில் கொலை செய்யப்பட்டவர் என்பதைக் கண்டறிந்த காவல்துறையினர் கொலை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் என்ற இடத்தில் உள்ள பயன்படுத்தாத விவசாய கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் சாக்குப் பையில் கட்டப்பட்டு கிடந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் சென்னை ஐஸ்அவுஸ், பேகம் சாகிப் 4-வது தெருவைச் சேர்ந்த இருதயநாதன் என்பவரின் மனைவியான அல்போன்சா மேரி என்பது தெரிய வந்தது. கடந்த 15-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் பதிவாகி உள்ளது. தொடர் விசாரணையில் அல்போன்சா மேரி நாள் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதும், அந்த விவகாரம் தொடர்பாகவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அல்போன்சாவை கொலை செய்த ராயப்பேட்டை வி.எம்.தெருவைச் சேர்ந்த, வள்ளி, மணிகண்டன் மற்றும் அவரது மனைவி தேவி, கொலைக்கு உடந்தையாக இருந்த மணிகண்டனின் நண்பர் சுரேஷ், ஆட்டோ ஓட்டுநர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
கந்து வட்டி கடனால், பெண் ஒருவரை சாக்கு மூட்டையில் கட்டி கொலை ! video phone beyonce mp3 | |
3 Likes | 3 Dislikes |
372 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 18 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét