
|| #விஜயபிராபாகரன் #திருவள்ளூர் #CaptainNews | #TamilNews
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தேமுதிக வடக்கு ஒன்றிய செயலாளா் இல்ல திருமணவிழாவில் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிராபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். வேலூா் மாவட்டம் சோளிங்கரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திருவள்ளுவா் மாவட்டம் பள்ளிப்பட்டு தேமுதிக வடக்கு ஒன்றிய செயலாளா் பி.எம்.சுப்பிரமணியன் - வேண்டாமிா்தம் தம்பதியரின் மகன் தமிழ் இனியன் - ரேகாவின் திருமண வரவேற்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை பரிசு பொருள் கொடுத்து வாழ்த்தினார்.
முன்னதாக, விழாவில் பங்கேற்க வருகை தந்த விஜய் பிரபாகரனுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டையிலிருந்து சோளிங்கர் வரை கட்சியினர் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளுவா் மாவட்ட செயலாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வேலூா் கிழக்கு மாவட்ட செயலாளா் பூட்டு தாக்கு நித்யா, சோளிங்கா் முன்னால் சட்டமன்ற உறுப்பினா்
பி ஆா் மனோகா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், திருவள்ளுர், வேலூா் கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
இல்ல திருமணவிழாவில் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிராபாகரன் தேமுதிக சார்பில் | |
30 Likes | 30 Dislikes |
706 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 15 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét